ADDED : ஜன 01, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மழை காரணமாக வரத்து குறைந்ததால் திண்டுக்கல்லில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு உயர்ந்தது.
திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காய பேட்டைக்கு திருப்பூர் ,நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 300 டன்னுக்கு மேல் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். சில நாட்களாக முதல்தரம் சின்ன வெங்காயம் ரூ.70 , 2ம் தரம் ரூ.30க்கு விற்பனையானது.
மழை காரணமாக வெளி மாவட்ட வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால் நேற்று முதல் தரம் ரூ.100க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்தால் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

