/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிட்டிஸ்போர்ட்ஸ் கைப்பந்து அணி வீரர்கள் தேர்வு
/
சிட்டிஸ்போர்ட்ஸ் கைப்பந்து அணி வீரர்கள் தேர்வு
ADDED : அக் 01, 2024 05:33 AM

சின்னாளபட்டி: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் 19 வயதிற்கு உட்பட்ட தமிழக கைப்பந்து அணி வீரர்கள் தேர்வு சின்னாளபட்டியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரகமத்கனி, தலைமை வகித்தார்.
சேரன் வித்யாலயா பள்ளி தாளாளர் சிவக்குமார், முதல்வர் திலகம் முன்னிலை வகித்தனர். மாநிலம் முழுவதும் உள்ள 8 மண்டலங்களில் இருந்து 72 வீரர்கள் பங்கேற்றனர். அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு திறன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தனர். அணிக்கு தேர்வாகும் 16 பேரும், நவம்பர் 3வது வாரத்தில் பஞ்சாப்பில் நடக்க உள்ள தேசிய போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்பர்.