/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆன்லைன் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
/
ஆன்லைன் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
ஆன்லைன் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
ஆன்லைன் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
ADDED : ஏப் 15, 2025 07:34 AM

நத்தம்: -திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகளால் பொதுமக்கள் பணத்தை இழப்பது வாடிக்கையாகி வருவதால் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. முகம் தெரியாத மர்ம நபர்கள் அலைபேசிக்கு நுாதன முறையில் லிங்க் அனுப்பி தங்களுக்கு பணம் பரிசாக கிடைத்திருப்பதாக மக்களிடம் ஆசையை துண்டுகின்றனர். இதில் ஏமாறும் பொதுமக்களின் விபரங்களை பெற்று கொண்டு அதிலிருந்து பணத்தை திருடுகின்றனர். மேலும் சில வடமாநிலத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் வங்கியில் இருந்து பேசுகிறோம், ஏ.டி.எம்., கார்டை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி கார்டின் நம்பரை பெற்று வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடுகின்றனர். இதுபோன்று பல்வேறு ஆன்லைன் மோசடியால் பணத்தை இழப்பவர்கள் புகார் செய்ய தயங்குவதோடு, எவ்வாறு புகார் செய்ய வேண்டும் என்று தெரியாமலும் இருக்கின்றனர். இதனால் தொடர்ந்து நூதன திருட்டுகள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் போலீசார் சில புகார்களில் பறிகொடுத்த பணத்தை மீட்டு கொடுத்தாலும் குற்றவாளிகளை பிடிக்க முடியாததால் குற்றங்கள் மீண்டும் தைரியமாக நடக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆசைவார்த்தைகளினால் சிக்குவோர் பலர் புகாரளிக்க முன் வருவதில்லை. இது போன்ற குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அலைபேசி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் இணைய குற்றங்களும் அதிகரித்துள்ளது. நூதன முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்களும் உருவாகியுள்ளன. குறுஞ்செய்திகள் அனுப்பி ஓ.டி.பி., எண்களை கேட்டறிந்து வங்கிக்கணக்கில் பணத்தை அபகரிக்கின்றனர். இணைய லிங்க் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பரிசு விழுந்திருப்பதாக ஆசையை தூண்டி பணத்தை அபகரிப்பதும் நடக்கிறது. இதனால் பலர் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இணைய வழி பண மோசடிகள் குறித்து அரசு மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இதன் மீது சைபர் கிரைம் போலீசாரும் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.எப்.சி.ராஜ்கபூர், காங்., வட்டார தலைவர், சாணார்பட்டி