
சின்னாளபட்டி: மாநில ஹேண்ட்பால் போட்டியில் முதல்வர் கோப்பையை வென்ற சின்னாளபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாநில, தேசிய ஹேண்ட்பால் போட்டிகளில் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது.
இந்தாண்டு முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் வேலுாரில் நடந்தது. இதற்கான திண்டுக்கல் மாவட்ட அணிக்கு இப்பள்ளி மாணவர்கள் 12 பேரும், திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி மாணவர்கள் 4 பேரும் தேர்வாகினர்.
வேலுார் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம் வென்றது. முதல்வர் கோப்பையுடன் 25 லட்சம் ரூபாய் பரிசு பெற்றது. வென்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சின்னாளபட்டி பள்ளியில் நடந்தது.
முதல்வர் திலகம் தலைமை வகித்தார். மாநில ஹேண்ட்பால் கழக செயலாளர் சிவக்குமார் பரிசு வழங்கினார். பள்ளி மேலாளர் பாரதிராஜா, அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆல்பிரட் யங், அபிஷேக் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் அசோக் குமார், செந்தில்குமார், ஆரோக்கிய ரஞ்சனி பங்கேற்றனர்.