ADDED : அக் 16, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார், எரியோடு, வடமதுரை, அய்யலுார் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள பட்டாசு கடைகளில் கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் பிரேம்குமார், தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா, தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா, முறையான லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே கடை வைத்துள்ளனரா என்பதை ஆய்வு செய்தனர்.