/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணறை ஆக்கிரமித்துள்ள அரசு ஊழியர்: மக்கள் போராட்டம்
/
கிணறை ஆக்கிரமித்துள்ள அரசு ஊழியர்: மக்கள் போராட்டம்
கிணறை ஆக்கிரமித்துள்ள அரசு ஊழியர்: மக்கள் போராட்டம்
கிணறை ஆக்கிரமித்துள்ள அரசு ஊழியர்: மக்கள் போராட்டம்
ADDED : அக் 20, 2024 05:38 AM

வத்தலக்குண்டு : என்.கோவில்பட்டியில் ஊராட்சி சார்பில் குளத்தின் கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறை ஆக்கிரமித்து பயன்படுத்த விடாமல் தடுக்கும் அரசு ஊழியர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுாத்துலாபுரம் என்.கோவில்பட்டியில் ஊராட்சி சார்பில் ரூ. 5 லட்சத்தில் செல்லாண்டி அம்மன் கோயில் குளக்கரையில் 800 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதை அருகிலுள்ள தோட்டத்துக்காரர் ஆக்கிரமித்து போர்வெல்லில் குழாய்கள்,மோட்டார் பம்புகள் அமைக்க விடாமல் தடுத்துவருகிறார். இதனால் மழைகாலத்திலும் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைகின்றனர். நேற்று குளத்திற்குள் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி துணைத்தலைவர் சங்கிலிபாண்டியன் கூறுகையில், என். கோவில்பட்டி வரட்சியான பகுதி என்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை குடிநீர் குழாயை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியரின் குடும்பத்தினர் அபகரிக்கும் நோக்கில் ஊராட்சி நிர்வாகத்தினரை பணிசெய்யவிடாமல் தடுத்துவருகிறார்கள்.
இதனால் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாதது போல் குடிநீரை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள தோட்டக்காரரர் மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.