/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொது இடத்தில் செட் அமைத்து ஆக்கிரமிப்பு ஊர் மக்கள் அகற்றியதால் மோதல்
/
பொது இடத்தில் செட் அமைத்து ஆக்கிரமிப்பு ஊர் மக்கள் அகற்றியதால் மோதல்
பொது இடத்தில் செட் அமைத்து ஆக்கிரமிப்பு ஊர் மக்கள் அகற்றியதால் மோதல்
பொது இடத்தில் செட் அமைத்து ஆக்கிரமிப்பு ஊர் மக்கள் அகற்றியதால் மோதல்
ADDED : நவ 16, 2024 02:40 AM
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் கோட்டாநத்தத்தில் பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து செட் அமைத்ததை ஊர் மக்கள் அகற்றியபோது இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.
குஜிலியம்பாறை அருகே கோட்டநத்தம் ஏ.டி., காலனியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் வாங்கி தனி நபர்களுக்கு பட்டா வழங்கி உள்ளனர்.
இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பால்ராஜ் வீடு அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்கான விளையாட்டு மைதானம், பூங்கா, மேல்நிலைத் தொட்டி அமைப்பதற்காக 12 சென்ட் காலி இடம் உள்ளது. இதனை பால்ராஜ் குடும்பத்தினர் ஆக்கிரமித்து செட் அமைத்துள்ளனர்.
இதை அகற்றக்கோரி பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தொடர் கோரிக்கை வைத்தனர். பால்ராஜ் குடும்பத்தினர் நீதிமன்றம் சென்றதால் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பு செட்டை அகற்றினர். அங்கு வந்த பால்ராஜ், மகன் ராஜகோபால் செட்டை பிரித்த பொதுமக்களுடன் வாக்குவாதம் செய்ய அடிதடியில் முடிந்தது. இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாகஅதே ஊரை சேர்ந்த குமரேசன் 23, உட்பட 5 பேர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றிய தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்த ஊர் மக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

