ADDED : அக் 02, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சுச்சுதா கைசேவா திட்டத்தின் கீழ் செப்.17 முதல் அக்.2 வரை துாய்மை படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தது. காந்திகிராம பல்கலை, திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லுாரி மாணவர்களால் ரயில்வே ஸ்டேஷன் முழுவதிலும் உள்ள குப்பை,பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.
தொடர்ந்து பிளாட்பாரங்களில் அமர்ந்திருந்த பொது மக்களிடம் கண்ட இடங்களில் குப்பையை வீசி செல்லக்கூடாது என விழிப்புணர்வு செய்யப்பட்டது. காந்திகிராம பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன்,துணை பதிவாளர் பஞ்சநத்தம்,ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார்,கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி,சுகாதார ஆய்வாளர்கள் வினோத்குமார், சியாம் பங்கேற்றனர்.

