ADDED : ஆக 31, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த் உத்தரவில், ஆர்.எம்.காலனி கோவிந்தாபுரம் மயான வளாகத்தில் சுகாதாரப் பணிகள் நடந்தது.
சுகாதார ஆய்வாளர் செல்வராணி மேற்பார்வையில் 3 ஏக்கர் பரப்பளவில் நடக்கும் துாய்மைப் பணியில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. குப்பை, பிளாஸ்டிக் பைகள், கழிவுகள் அகற்றும் பணியில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
