UPDATED : ஆக 31, 2026 09:13 PM
ADDED : ஆக 31, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:உத்தரகண்ட் மாநிலத்தில் காங்., தலைவர் ராகுல் மீது வழக்குப் பதிவு செய்த பா.ஜ., அரசை கண்டித்து ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாகல் நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மேற்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பங்கேற்று பேசினர். நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
