UPDATED : ஆக 31, 2026 09:58 PM
ADDED : ஆக 31, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.
அனைத்து பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு ஏ.ஆர்.சி., பார்சல் நிறுவன இயக்குனர் அழகுமகேஸ்வரி பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து நடந்த செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சாரதா கட்டளை செயலாளர் நாகராஜன் பரிசு வழங்கினார்.
பேராசிரியர் ஞானசம்பந்தன், மதுரை அரவிந்தோ மீரா பள்ளி குழும நிறுவனர் சந்திரன் பேசினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னாள் எம்.பி., சித்தன், ஏ.ஆர்.சி., பார்சல் நிர்வாக இயக்குனர் வருண் ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முதல்வர் நகரத்தினம், இணை நிறுவனர் சங்கர் பங்கேற்றனர்.
