ADDED : நவ 20, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை ஊராட்சியை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட சின்னழகுநாயக்கனுார் ஊராட்சியின் ரோட்டோர பகுதிகளில் செடி, கொடிகள் முளைத்து, குப்பை நிறைந்து இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து பி.டி.ஓ., முருகானந்தம் தலைமையில் ஊராட்சி பகுதி முழுவதும் ஒட்டுமொத்த துாய்மைப் பணி நடந்தது. ஊராட்சி செயலர் பெருமாள், ஊக்குனர் பிரியா உடன் இருந்தனர்.
