/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கும் சாக்கடை அடைப்பு
/
கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கும் சாக்கடை அடைப்பு
கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கும் சாக்கடை அடைப்பு
கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கும் சாக்கடை அடைப்பு
ADDED : செப் 27, 2024 07:20 AM

வீணாகும் குடிநீர் : திண்டுக்கல் அருகே மாலப்பட்டியில் குடிநீர் குழாய் வாழ்வு வழியாக அதிக அளவில் தண்ணீர் வீணாக செல்கிறது.இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது .இதை சரி செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-------முருகேஸ்வரி, மாலப்பட்டி.
மின் கம்பத்தால் விபத்து : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு குடியிருப்பு ரோட்டில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், திண்டுக்கல்.ஆக்கிரமிப்பால் அவதி : கஸ்பா அய்யலுாரில் இருக்கும் அங்கன்வாடி மையத்தையொட்டி ஆக்கிரமிப்பாக மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஈக்களும், விஷப்பூச்சிகளும் மையத்திற்குள் புகுந்துவிடுவதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
- வேல்முருகன், அய்யலுார்.ஜல்லி கற்களால் விபத்து : நத்தம் அருகே திருமலைக்கேணி குரும்பபட்டிரோட்டில் லாரிகளில் ஜல்லி கற்களைபோட்டு செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சவுந்தரராஜன், கம்பிளியம்பட்டி.நடைமேடை சேதம்
திண்டுக்கல் - பழநி ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே சாக்கடை நடைமேடை சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர் .
-விக்னேஷ், திண்டுக்கல்.சாக்கடையில் அடைப்பு : திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் அருகே பழனியப்பாநகர் 2வது தெருவில் சாக்கடையில் தேங்கிய கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருப்பதால் கழிவுநீர் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்தசாமி, திண்டுக்கல்.
அள்ளப்படாத குப்பை : திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாக அள்ளாமல் உள்ளது .துர்நாற்றமும் வீசுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பை குவிந்து சுற்றுசூழலும் பாதிக்கிறது .சுகாதாரக்கேடால் பலரும் பாதிக்கின்றனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், திண்டுக்கல்.

