UPDATED : நவ 07, 2026 07:51 PM
ADDED : நவ 07, 2026 07:46 PM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி: பிரதமர் மோடியின் சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தின் கீழ் சாணார்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைக் காவலர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி விராலிப்பட்டியில் நடந்தது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 250 துாய்மைக் காவலர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திகைசாமி, மாவட்ட என்.ஜி.ஓ., அமைப்பாளர் சுரேஷ், ஒன்றியத் தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் வீரப்பன், செயலாளர் அப்பிச்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
