/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் கோப்பை கால்பந்து திண்டுக்கல் அணி முதலிடம்
/
முதல்வர் கோப்பை கால்பந்து திண்டுக்கல் அணி முதலிடம்
முதல்வர் கோப்பை கால்பந்து திண்டுக்கல் அணி முதலிடம்
முதல்வர் கோப்பை கால்பந்து திண்டுக்கல் அணி முதலிடம்
ADDED : அக் 20, 2024 05:03 AM

திண்டுக்கல், : முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் திண்டுக்கல் மாவட்ட கல்லுாரி அணி முதலிடம் பெற்ற நிலையில் திண்டுக்கல் வந்த அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் அக். 12 முதல் அக்.18 வரை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி உட்பட 38 மாவட்ட அணிகள் பங்கு பெற்றன.
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்ட கல்லுாரி அணி இறுதி போட்டிக்கு தேர்வாகி - செங்கல்பட்டு அணியுடன் மோதின.
சமநிலை பெற்ற நிலையில் முதலிடம் , இரண்டாமிடத்திற்கான தேர்வினை முடிவு செய்ய குலுக்கள் முறை தேர்வு நடந்தது. அதில் திண்டுக்கல் மாவட்ட கல்லூரி அணி முதலிடம் பெற்று முதல்வர் கோப்பை, பரிசுத்தொகை ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
திண்டுக்கல் வந்த வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம்தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, ஜி.டி.என்., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராஜசேகரன், மாவட்ட கால்பந்துகழக துணைத்தலைவர் ரமேஷ் படேல், உதவி செயலாளர்கள் ஈசாக்கு, தங்கத்துரை, மூத்த விளையாட்டு வீரர் ராஜ்மோகன், பயிற்றுநர் அருண் கலந்து கொண்டனர்.