UPDATED : நவ 02, 2026 09:20 PM
ADDED : நவ 02, 2026 09:17 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் சேத்துார் கிராமம் பெருமாள் மலை குட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்துவது தெரிந்தது. அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிஓடிவிட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த சேவல்கள், 18 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். மேலும் சேவல் சண்டை நடத்தியது தொடர்பாக சொறிப்பாறைபட்டியை சேர்ந்த தமிழ் 30, கண்ணன் 40, உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
