ADDED : நவ 02, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி அருகே வத்தகவுண்டன்வலசு பகுதி கொல்லம்பாறை தோட்டத்தில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க ஆயக்குடி எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்ட வஞ்சியப்பன் 40, முருகானந்தம் 30, மதுரையை சேர்ந்த டேவிட் ராஜன் 20, கொல்லம்பாறையை சேர்ந்த கனகராஜ் 27, ஆகியோரை கைது செய்து இரண்டு சேவலை பறிமுதல் செய்தனர்.

