ADDED : நவ 18, 2024 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,: திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் பிரபாகரன். இவர் மனைவி அங்குள்ள ஒரு கடையில் 100 கிராம் எடை கொண்ட இட்லி பொடி பாக்கெட்டை வாங்கி உள்ளார்.
அதை திறந்து தட்டில் வைத்து சாப்பிட முயன்ற போது இறந்தநிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் திண்டுக்கல்லில் உள்ள சம்பந்தபட்ட இட்லி பொடி தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.