ADDED : மார் 22, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் நிலையான காபி சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், பின்பற்றுதல் குறித்த கருத்தரங்கு நடந்தது.
காபி வாரிய உறுப்பினர்கள் சேகர் நாகராஜன், ரவிச்சந்திரன், விரிவாக்க மைய இணை இயக்குனர் கருத்தமணி முன்னிலை வகித்தனர். துணை இயக்குனர் தங்கராஜ் வரவேற்றார். தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் ஜெயக்குமார், சொட்டுநீர் பாசன நிபுணர் செங்கோட்டையன், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் ரவீந்திரன், தனியார் நிறுவன தோட்ட மேலாண்மை இயக்குனர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.