ADDED : பிப் 02, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: நிலையான விவசாயத்தில் காபியில் தற்போதைய சூழ்நிலை, எதிர்கால வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.
காபி வாரிய ஆராய்ச்சி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை இயக்குனர்கள் நந்தகோபால், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் சேகர் நாகராஜன், ரவிச்சந்திரன், முதுநிலை தொடர்பு அலுவலர் தங்கராஜ் வரவேற்றார். தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாலகும்பகன், விஞ்ஞானிகள் சோமசேகர்கவுடாபட்டில், ரூபக்குமார், விவசாயிகள் மகேஷ் நாராயணன், ரெஜிஸ் பேசினர். இளநிலை தொடர்பு அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

