UPDATED : நவ 23, 2026 09:40 PM
ADDED : நவ 23, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
பழநி:
பழநி முருகன் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களது நலன் கருதி கோயில் நிர்வாகம் சார்பில் கோடைகாலத்தில் மோர், குளிர்காலத்தில் சுக்கு காபி வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் யானைப்பாதையில் இடும்பன் கோயில் அருகே பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
