/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் காபி வித் கலெக்டர்
/
திண்டுக்கல்லில் காபி வித் கலெக்டர்
ADDED : ஜூலை 01, 2025 03:14 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 12ம் வகுப்பு மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவல உள்ள கூட்ட அரங்கில் நடந்த இதில் கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.
25க்கு மேற்பட்ட 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
12 ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து ஒவ்வொரு மாணவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு எஸ்.பி., கலெக்டர் பதிலளித்தனர்.
தேவையான அறிவுரைகள், என்ன படிப்புகள் உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கலெக்டர் சரவணன் கூறுகையில் ''வாரந்தோறும் திங்களன்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பர். வாரந்தோறும் 4 பள்ளிகள் வீதம் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.