/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோவை -- திண்டுக்கல் மெமு ரயிலை கந்த சஷ்டி விழா வரை இயக்குங்க ரயில் உபயோகிப்பாளர் நல சங்கம் வலியுறுத்தல்

ADDED : நவ 05, 2024 05:41 AM
பழநி: பழநி வழியே இயக்கப்படும் திண்டுக்கல்- கோவை மெமு ரயிலை கந்த சஷ்டி திருவிழா முடியும் வரை இயக்க பழநி ரயில் உபயோகிப்பாளர் நல சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் ஸ்ரீனிவாசன், இணைச்செயலாளர், பாலசுப்பிரமணியன், நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தீபாவளி முன்னிட்டு பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில் திண்டுக்கல்- கோவை இடையே முன்பதிவு இல்லா மெமு ரயில் அறிவிக்கப்பட்டது. நாளை (நவ.6) வரை இயக்கப்படுகின்றது. காலை 9:35 மணிக்கு கோவையில் புறப்பட்டு மதியம் 1:10 மணிக்கு திண்டுக்கல் வருகிறது.
எதிர்மார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மாலை 5:50 மணிக்கு சென்றடைகிறது.
எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2400 பயணிகள் பயணம் செய்யலாம்.
இந்த ரயில் போத்தனுார், கிணத்துக்கடவு,பொள்ளாச்சி, உடுமலை, பழநி ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இது திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வதன் வாயிலாக அங்கிருந்து திருச்சி, மதுரை மார்க்கமாக செல்லும் ரயில்களை பிடிப்பது எளிது.
பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால் பழநியில் கந்த சஷ்டி விழா நடப்பதால் இந்த ரயிலை நவ.9 வரை நீடிக்க வேண்டும் என்றனர்.