UPDATED : ஜூலை 07, 2026 10:37 PM
ADDED : ஜூலை 07, 2026 10:32 PM
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் துர்கா ஆய்வு செய்தார்.
அதன்படி இலங்கை அகதிகள் முகாமில் ரூ.5.60 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள், அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மக்கள் ஆரோக்கிய இயக்கம் சார்பில் மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் நியமிக்க மனு அளிக்கப்பட்டது.
வத்தலக்குண்டு பேரூராட்சியில் ரூ.35 கோடியில் நடக்கும் அம்ருத் திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனைகளுக்கு அரசு மதிப்பீடு இல்லாமல் பட்டா பெற முடியாத சூழ்நிலையை பேரூராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் மாற்றித்தர தலைவர் சிதம்பரம் மனு அளித்தார்.
தாசில்தார் ஜெயபிரகாஷ், செயல் அலுவலர் ஆஷாராணி உடன் இருந்தனர்.
