/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' மலைப்பகுதிகளில் தடை நெகிழி பாட்டில்களை பயன்படுத்தினால் பசுமை வரி ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி தகவல்

ADDED : நவ 10, 2024 04:38 AM
திண்டுக்கல் : ''கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பாட்டில்களை பயன்படுத்துவோருக்கு பசுமை வரி தீவிரமாக வசூலிக்கப்படும் ''என கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்குஇ--பாஸ் நடைமுறை அமல்படுத்தி வருவது குறித்தும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பாட்டில்கள் பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள், நிறுவனங்களுக்கு ரூ.20 -(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறையினை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து திண்டுக்கல்லில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர், உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் முறையினை எளிமைப்படுத்திட கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி, கட்டகாமன்பட்டி, பழநி பாலசமுத்திரம் பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி, வத்தலகுண்டு சித்தரேவு, தருமத்துப்பட்டி, ஒட்டன்சத்திரம் வடகாடு பகுதிகளில் வனத் துறை சோதனை சாவடி, கொடைக்கானல் நகராட்சி, ஊராட்சித் துறை ஒருங்கிணைப்புடன் இ-பாஸ் ஸ்கேனிங் செய்து சரிபார்த்தல் பணிகள் நடைபெறும்.
கொடைக்கானல் சுற்றிய மலைப்பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர், குளிர்பான நெகிழிப் பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வீதம் பசுமை வரியாக விதிக்கப்படும்.
எளிதாக இ-பாஸ் எடுக்க உதவும் வகையில் கொடைக்கானலுக்கு செல்லும் பகுதி முக்கிய உணவகங்கள், விடுதிகள், பெட்ரோல் பங்க், கடைகள், பஸ் நிறுத்தங்களில் இ-பாஸ் க்யூஆர் கோடு, இணைய முகவரி, விழிப்புணர்வு வாசகங்களுடன் பதாகைகள் நிறுவப்படும் என்றார்.