குப்பை தரம் பிரித்து வழங்க கலெக்டர் விழிப்புணர்வு
குப்பை தரம் பிரித்து வழங்க கலெக்டர் விழிப்புணர்வு
ADDED : செப் 21, 2026 01:26 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் கீழ் குப்பையை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் துர்கா தலைமை வகித்து பேசுகையில், 'மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்பு கவனக் கழிவுகள் என 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வீடு தேடி வரும் துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.', என்றார்.
முன்னதாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பஸ் ஸ்டாண்ட், நேருஜி நகர், குமரன் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட துாய்மைப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பொதுமக்களிடம் குப்பை சேகரிப்பதற்கான சிறிய டப்பாக்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு பணிகளை துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ., பழனிவேல், மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
