ADDED : செப் 21, 2026 01:26 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: வார விடுமுறை காரணமாக குளுகுளு நகரான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, செட்டியார் பூங்கா மற்றும் வனச்சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்தனர். தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பின் ஒருமணி நேரம் மிதமான மழை பெய்தது.
