நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் நடக்கும் ரூ.1.83 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.பாடியூர் ஊராட்சியில் நர்சரியில் மரக்கன்று வளர்ப்பு பணி, உயிரி உரம் தயாரிப்பு, நுாலகம், கலைஞரின் கனவு இல்ல வீடுகள், கால்நடை மருந்தகம், ராஜகவுண்டன்பட்டியில் கதிரடிக்கும் களம், சேர்வைகாரன்பட்டியில் அங்கன்வாடி மையம், பிரதமர் திட்ட வீடுகள், காணப்பாடியில் ஊராட்சி கட்டடம், வகுப்பறை கட்டடம், காட்டுப்பட்டி ரோடு புதுப்பித்தல் பணிகளை ஆய்வு செய்தார்.
பி.டி.ஓ.,க்கள் கண்ணன், சுப்பிரமணி, வேளாண்மை துணை இயக்குனர் அமலா, தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் உடனிருந்தனர்.