ADDED : ஜன 08, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல்,தொழில்நுட்பக் கல்லுாரியில் நேற்று 8 வது பட்டமளிப்பு விழா நடந்தது. அறங்காவலர் கந்தசாமி,தாளாளர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமரன் வழி நடத்தினார். மதுரை டிராக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் அசோசியேட் துணை தலைவர் கணபதி சுப்பிரமணியன் பங்கேற்றார்.
அண்ணா பல்கலை அளவில் பதக்கம் பெற்ற மாணவர்களான சப்ரீன் பாத்திமா, சூர்யா ஆகியோரை கல்லுாரி தாளாளர் பதக்கம் வழங்கி பாராட்டினார். கல்வியிலும், நன்னடத்தையிலும் சிறந்து விளங்கும் மாணவனுக்காக வழங்கப்படும் சென்னிமலை கவுண்டர் நினைவு விருது,தனுஜ் என்ற மாணவருக்கும், சிறந்த மாணவிக்கான கருணையம்மாள் நினைவு விருது மாணவி சூர்யாவிற்கும் வழங்கப்பட்டது. 300 க்கு மேல் மாணவர்கள் பட்டம்பெற்றனர்.