ADDED : மார் 20, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : சுள்லெறும்பு கேத்தம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ் 45. இவரது வீட்டருகே அதே ஊரை சேர்ந்த நகுலன் வீடு கட்டி வருகிறார். இதன் பணியின் போது சின்னராஜ் வீட்டின் கழிவுநீர் பைப் உடைந்தது.
சின்னராஜ் அவரது மனைவி ஜோதீஸ்வரி கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நகுலன் சின்னராஜை தாக்கினார். சின்னராஜின் தாய் பாப்பாத்தியையும் கீழே தள்ளி விட்டார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.

