/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குட்டுப்பட்டிக்கு வந்தது மின்விளக்கு, சாக்கடை, குடிநீர்
/
குட்டுப்பட்டிக்கு வந்தது மின்விளக்கு, சாக்கடை, குடிநீர்
குட்டுப்பட்டிக்கு வந்தது மின்விளக்கு, சாக்கடை, குடிநீர்
குட்டுப்பட்டிக்கு வந்தது மின்விளக்கு, சாக்கடை, குடிநீர்
ADDED : பிப் 08, 2025 05:32 AM

நத்தம்: நத்தம் ஒன்றியத்தில் உள்ள குட்டுப்பட்டி ஊராட்சியில் மின்விளக்கு, குடிநீர், சாக்கடை வசதி இன்றி கிராம மக்கள் பரிதவித்த நிலையில் தினமலர் செய்தி எதிரொலியாக மின்விளக்கு, குடிநீர், சாக்கடை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்கப்பட்டது.
புதுார், பஞ்சயம்பட்டி, தி.நகர், பாலப்பட்டி, ஒத்திணிப்பட்டி, குட்டுப் பட்டி, லட்மிபுரம், கிழக்குத்தெரு, சன்னாசி நகர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் மலையூர் மலை கிராமமும் உள்ளது. இந்த கிராமத்தில் தற்போது வரை ரோடு, பஸ், மருத்துவ வசதி என அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். சாக்கடை இல்லாமல் கழிவுநீர் வீதிகளில் சென்றது. சில பகுதிகளில் சாக்கடை இருந்தும் மண் குவிந்து கழிவுநீர் செல்ல வழியின்றி சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது.
வடக்குதெரு பகுதியில் 30க்கு மேற்பட்ட மின் விளக்குகள் பழுதாகி பல மாதங்களுக்கும் மேலாக எரியாமல் இருள் சூழ்ந்து மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் முறையாக வழங்கவில்லை. சில குடியிருப்புகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்புகள் வழங்காமல் இருந்தது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் உங்கள் ஊராட்சி பகுதியில் ஜன.28 ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மண் மூடிய சாக்கடைகளை சீரமைக்கும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். 30க்கு மேற்பட்ட இடங்களில் எரியாமல் இருந்த மின் விளக்குகள் புதிதாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இருள் சூழ்ந்திருந்த கிராமம் வெளிச்சத்திற்கு வந்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குடிநீர் தட்டுப்பாடு இருந்த பகுதிகளில் குடிநீர் விநியோகமும் வழங்கப்பட்டது. அடிப்படை வசதிகள் கிடைத்ததால் மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.