ADDED : செப் 20, 2026 03:54 PM
திண்டுக்கல், செப்.
21 – திண்டுக்கல் நகைச்சுவை மன்றத்தின் சார்பில், நகைச்சுவை விழா ரவுண்ட்ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஜி.டி.என்., கல்விக் குழுமத்தின் தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். சிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் முரளிதரன், கோவை நகைச்சுவை மன்றத்தின் செயலாளர் தனபால் முன்னிலை வகித்தனர். திருச்சி நகைச்சுவை மன்ற நிர்வாகி சிவகுருநாதன் பேசினார். ‛வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்’ எனும் தலைப்பில் நகைச்சுவை பேச்சாளர் சண்முக வடிவேல் பேசினார். நிகழ்வில் திண்டுக்கல் நகைச்சுவை மன்றத்தின் தலைவர் சண்முகம், துணைத் தலைவர் ரமேஷ் பட்டேல், செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் மனோகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சிற்றம்பல நடராஜன், யூசுப் அன்சாரி, நாகராஜன், ராஜசேகர், ஸ்ரீதர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிர்வாகிகள் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
