ADDED : மார் 04, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், விடுமுறை நாட்கள், முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் பெருந்திட்ட வரைவில் உள்ள திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கென பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். முதற்கட்ட பணிகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் துரிதமாக நடக்கிறது. இத்திட்டத்தில் பழநியில் 5 இடங்களில் அலங்கார வளைவு அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இணைந்து விடுதிகள் புனரமைப்பு, வின்ச் ஸ்டேஷன் பகுதியில் இரண்டு லிப்ட், ரோப் கார் பகுதியில் ஒரு லிப்ட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிவிதியில் முக்கிய இடங்களில் அழகிய ஓவியங்களுடன் கூடிய சுவர்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ. 99.98 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

