/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியில் காமன் தகன விழா
/
சின்னாளபட்டியில் காமன் தகன விழா
ADDED : மார் 04, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமய(காமன்) சுவாமி கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா பிப்.,18ல் மூன்றாம் பிறை தரிசனத்துடன் பிருந்தாவன தோப்பு ராமஅழகர் கோயிலில் துவங்கியது.
பேக்கரும்பு, மா, ஆமணக்கு, அரசு, அரளி இலை, பூக்களால் சுவாமியை அலங்கரித்தல் நடந்தது.
பிறை தரிசனத்தை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தினம் ஒரு கட்டளைதாரர் வீதம் 15 நாட்களுக்கு வழிபாடு நடந்தது. தினமும் பலவித பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆராதனை நடந்தது. நிறைவாக நேற்று முன்தினம் இரவு காமன் தகன விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு செலுத்தி வழிபாடு செய்தனர்.

