தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சந்திர கிரகணத்தால் கோயில் நடை அடைத்து பின் திறப்பு

 சந்திர கிரகணத்தால் கோயில் நடை அடைத்து பின் திறப்பு

 சந்திர கிரகணத்தால் கோயில் நடை அடைத்து பின் திறப்பு


ADDED : மார் 04, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று சந்திர கிரகணத்தால் கோயில்களில் நடை அடைத்து பின் திறந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

திண்டுக்கல் அபிராமி அம்மன் காளாத்தீஸ்வரர் கோயில் வழக்கம் போல் நேற்று காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6:30 மணி வரை மூலவர் அபிராமி அம்மன், காளாத்தீஸ்வரர், பிரகார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு காலசந்தி பூஜை, காலை 9:00 மணிக்கு உச்சிக்கால பூஜையுடன் கோயில் நடை அடைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை 3:20 முதல் மாலை 6:47 வரை சந்திர கிரகணம் நடந்தது. இதனால் காலை 9:01 முதல் இரவு 7:00 மணி கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோயில் பிரகாரம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு நித்ய பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

அதுபோல் வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் காலை 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நித்ய பூஜைகள் நடந்தன.

பழநி: பழநி முருகன் கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட உப கோயில்களில் நேற்று உச்சிக்கால பூஜை நடந்ததும் மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. சந்திர கிரகணம் நிறைவடைந்ததும் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 7:00 மணிக்கு பூஜைகள் நடந்தன. பழநி கோயிலுக்கு வந்த பக்தர்கள் படிப்பாதை, வின்ச், ரோப்காரில் காலை 10:30 மணி முதல் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இன்று (மார்ச் 4) வழக்கம் போல் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us