sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டில் பஸ் ஸ்டாப்களால்..  பயணிகள் அவதி கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது

3

ADDED : மார் 04, 2026 06:09 AM

Google News

ADDED : மார் 04, 2026 06:09 AM

3

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் உள்ளன.

மலை சார்ந்த ஏராளமான கிராமப் பகுதிகளும் அதிகளவு உள்ளன. அனைத்து குக்கிராமங்களிலும் பஸ் ஸ்டாப் வசதி செய்யப்பட்டுள்ள போதும் பராமரிப்பு என்பது அறவே இல்லாத நிலை உள்ளது. இந்நிலை அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊரக உள்ளாட்சி, பேரூராட்சி பகுதிகளில் நீடிக்கிறது. இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாப்களில் போஸ்டர் ஒட்டும் கலாசாரம், முகம் சுளிக்கும் வகையில் கிறுக்கல், இருக்கை, மேற்கூரை சேதம், பஸ் ஸ்டாப்பை சுற்றிலும் புதர் மண்டிய சூழலால் விஷ ஐந்துகள் நடமாட்டம், குடிமகன்கள் பாராக பயன்படுத்துவது, அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு போன்ற காரணங்களால் ப யணிகள் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்த தயங்குகின்றனர்.

தற்போது கோடைக்கு முன்பே வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்கும் போக்குள்ளது. பஸ் ஸ்டாப்பை பராமரிப்பை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இதனை அறவே கண்டுகொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Dinamalar
      Follow us