UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: மா.(கம்யூ) லெனினிஸ்ட் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ரவி, மீனாட்சிசுந்தரம் பேசினர்.‘சிறுமலையில் வனத்துறை ரோடுகளை ஊராட்சி ரோடுகளாக மாற்ற வேண்டும், நில உரிமை, வன உரிமை கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் முருகேசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்களுடன், கலெக்டர் துர்காவை சந்தித்து, மனுக்கள் அளிக்கப்பட்டது.
