தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொடைக்கானலில் குவிந்த பயணிகள்: நெரிசலால் அவதி

கொடைக்கானலில் குவிந்த பயணிகள்: நெரிசலால் அவதி

கொடைக்கானலில் குவிந்த பயணிகள்: நெரிசலால் அவதி


ADDED : ஆக 15, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல், ஆக.16

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுதந்திர தினம், ஞாயிறுக்கிழமை என அடுத்தடுத்த நாட்கள் விடுமுறையால் மலை நகரில் சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச்சுற்றுலா தலம், மன்னவனுார் சூழல் சுற்றுலா தலத்தில் பயணிகள் குவிந்தனர். ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரியும் செய்து பயணிகள் மகிழ்ந்தனர்.

அவ்வப்போது தரையிறங்கிய மேகக்கூட்டம், சாரல் மழை என சில்லிடும் சீதோஷ்ண நிலையை பயணிகள் ரசித்தனர். நேற்று நகர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேல்மலை பகுதியில் நீடித்த நெரிசலால் 2 மணி நேரம் பயணிகள் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us