/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் 3 டிகிரி குளிரால் பயணிகள் அவதி
/
'கொடை'யில் 3 டிகிரி குளிரால் பயணிகள் அவதி
ADDED : டிச 16, 2025 05:05 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிகரித்து வரும் பனியின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை சரி வர பெய்யாத நிலையில் கடந்த மாதம் முன்பனிக்காலம் துவங்கியது. சில தினங்களாக மதியத்திற்குப் பின் பனியின் தாக்கம் அதிகரித்து வெட, வெடக்கும் குளிர் நிலவுகிறது.
பகலில் 23 டிகிரி வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகிறது. ஏரிச் சாலை, ஜிம்கானா, அப்சர்வேட்டரி, மன்னவனுார் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக் பகுதியிலிருந்து தெரியும் தேனி, திண்டுக்கல், மதுரை நகரங்கள் மூடுபனியால் போர்த்தி, கடலில் நுரை ததும்புவது போன்று காட்சியளிக்கின்றது.
வரும் நாட்களில் கடும் பனிப்பொழிவு நிலவும் என வானிலை மையத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் கொடைக்கானலில் உறைபனி நிலவக்கூடும். தற்போதைய பனியால் சரும வெடிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் குளிரை தாங்கும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆயத்த ஆடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

