/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேவாங்கு சரணாலய பணி ஆலோசனை * ரூ.20 கோடியில் அமைகிறது
/
தேவாங்கு சரணாலய பணி ஆலோசனை * ரூ.20 கோடியில் அமைகிறது
தேவாங்கு சரணாலய பணி ஆலோசனை * ரூ.20 கோடியில் அமைகிறது
தேவாங்கு சரணாலய பணி ஆலோசனை * ரூ.20 கோடியில் அமைகிறது
ADDED : டிச 16, 2025 04:53 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கான பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அய்யலுாரில் ரூ.20 கோடி செலவில் புதிதாக தேவாங்கு சரணாலயம், ஆராய்ச்சி மையத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இது குறித்த ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரும், சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளருமான சுப்ரியா சாகு தலைமை வகித்து பேசினார். கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். வனத்துறை அதிகாரிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அய்யலுாரில் தேவாங்கு சரணாலய பணிகளை ஆய்வு செய்தனர்.