/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இழப்பீடு: தாசில்தார் அலுவலகம் ஜப்தி
/
இழப்பீடு: தாசில்தார் அலுவலகம் ஜப்தி
ADDED : அக் 31, 2025 01:37 AM
பழநி:  திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது.
பழநியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கலிக்கநாயக்கம்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி குடும்பத்தினருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்கான நிவாரண தொகையை அதிகரித்து வழங்க கோரி சத்தியமூர்த்தி மனுவை ஏற்று பழநி கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீட்டுத்தொகையை வழங்காமல் ஆதிதிராவிடர் நலத்துறை தாமதம் செய்தது.இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் ரூ. 64 லட்சம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்ததால் பழநி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி சார்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இழப்பீடு வழங்காததால் நீதிபதி ரேணுகாதேவி உத்தரவின்படி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய அலுவலர்கள் வந்தனர். அலுவலகத்திலிருந்தவர்களிடம் ஜப்தி நோட்டீசை வழங்கி நாற்காலிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்சென்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

