ADDED : அக் 05, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரியின் தமிழ்த்துறை தமிழ் இலக்கிய களத்தின் சார்பில் கல்லுாரி செயலர் ரெத்தினம்,இயக்குநர் துரை ரெத்தினம்,முதல்வர் சரவணன் வழிகாட்டலில் காந்திஜி பிறந்தநாள்,காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி,கவிதைப்போட்டி,மடல் தயாரித்தல் போட்டிகள் நடந்தது.
தமிழ் இலக்கிய ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி போட்டிகளை ஒருங்கிணைக்க தமிழ்த்துறை தலைவர்கள் வீ.கவிதா,மு.கவிதா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு ,சான்றிதழ் வழங்கினார்.