sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மந்த கதியில் குடகனாறு கிளை வாய்க்கால் பணி; பழைய கற்களை பயன்படுத்துவதாக புகார் கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

/

மந்த கதியில் குடகனாறு கிளை வாய்க்கால் பணி; பழைய கற்களை பயன்படுத்துவதாக புகார் கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

மந்த கதியில் குடகனாறு கிளை வாய்க்கால் பணி; பழைய கற்களை பயன்படுத்துவதாக புகார் கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு

மந்த கதியில் குடகனாறு கிளை வாய்க்கால் பணி; பழைய கற்களை பயன்படுத்துவதாக புகார் கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய எதிர்பார்ப்பு


ADDED : நவ 13, 2024 04:22 AM

Google News

ADDED : நவ 13, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : குடகனாறு அணையின் வலது பிரதான பாசன வாய்க்கால் புதுப்பிக்கும் பணிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் பாதி வேலைகள் கூட முடியாமல் உள்ளது. நடைபெற்ற பணிகளிலும் பழைய சிலாப் கற்களை அப்படியே வைத்து புதுப்பிப்பதால் இந்த கற்கள் வெகு நாளைக்கு தாங்காது என்பதால் கலெக்டர் இப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் 27 அடி கொண்ட குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. 5 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட இந்த அணை 1977 ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைந்ததால் பலத்த பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு கூடுதலாக 10 ஷட்டர்கள் வைத்து அணை புதுப்பிக்கப்பட்டது. இந்த அணையின் 2 கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல் ,கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது. தற்போது 15 ஷட்டர்கள் உள்ள நிலையில் பழைய 5 ஷட்டர்கள் மட்டும் ரூ.15 கோடி திட்ட மதிப்பில் 2023ல் புதுப்பிக்கப்பட்டது.

இதேபோல் அழகாபுரியில் இருந்து வெள்ளியணை வரையிலான பிரதான பாசன வாய்க்கால் ரூ.65 கோடி திட்ட மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. முக்கிய இடங்களில் பாலங்கள் , ரோடுகளை கடக்கும் இடங்களில் சுரங்க பாலங்களை கட்டி தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கில் பணிகள் துவங்கியன.

இரண்டு ஆண்டுகளான நிலையில் நடப்பு மழைக்கால பருவத்திலும் இந்த பணிகள் முடியாததால் வலது பிரதான வாய்க்காலில் வெள்ளியணை வரை நடப்பு ஆண்டில் தண்ணீர் கொண்டு செல்ல வாய்ப்பே இல்லாமல் உள்ளது.

இந்த பணிகள் பல்வேறு இடங்களில் துவங்கப்படாமலே உள்ளது. ஏற்கனவே உள்ள வாய்க்காலின் இரு புறங்களிலும்5 சிலாப் கற்கள் வரை பதித்துள்ளனர். அதில் உடைந்து பயன்பாடற்று போன கற்களை மட்டும் மாற்றி விட்டு அதே வரிசையில் கூடுதலாக மூன்று கற்களை உயரமாக பதித்து வருகின்றனர். இந்த கிளை வாய்க்கால்கள் துவங்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆன நிலையில் பழைய சிலாப் கற்களை மாற்றிவிட்டு புதிய கற்களை பதிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் ரூ.65 கோடி திட்ட பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் பழைய கற்களை அப்படியே வைத்து பணிகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த பணிகளையும் விரைந்து முடித்தால்தான் வழியிடை கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெற முடியும். அதேபோல் வழியிடை குளங்களுக்கும் நீர் நிரப்பினால் தான் இப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்னையின்றி வாழ முடியும். எனவே பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நடைபெற்று வரும் இப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாம்புலுபட்டி விவசாயி வி.ஜெகதீசன் கூறுகையில்,''

அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் கிளை வாய்க்கால் பணிகள் இன்னும் முடிந்த பாடில்லை. பல இடங்களில் பழைய வாய்க்கால் இடிக்கப்பட்ட நிலையில் வெறுமனே கிடக்கிறது. இந்த பணிகள் இப்போதைக்கு முடிய வாய்ப்பில்லை. இது குறித்து சி.எம்., செல்லுக்கு புகார் அனுப்பியதை தொடர்ந்து, ஒன்றிய அதிகாரி ,உதவி பொறியாளர் சார்பில் நவம்பர் கடைசிக்குள் கூம்பூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் விடுவதாக உறுதியளித்துள்ளனர். வாய்க்கால் பணிகளே முடியாத நிலையில் எப்படி தண்ணீர் வரும் என தெரியவில்லை. அதிகாரிகள் மக்களை ஏமாற்றுவதாகவே நினைக்கிறேன்.

இந்த வாய்க்கால் பணியில் பல இடங்களில் பழைய கற்கள் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும்'' என்றார்.

ஆர்.வெள்ளோடு விவசாயி பி.பாலசீனிவாசன் கூறுகையில்,''குடகனாறு அணையில் இருந்து இந்த வலது பிரதான வாய்க்காலில் கரூர் மாவட்டம் வெள்ளியணை வரை தண்ணீர் சென்றது. விவசாயிகள் பயன் பெற்றனர். தற்போது இரண்டு ஆண்டுகளாக வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருவதால் நீர் வரத்து இல்லாமல் வறட்சி நிலவுகிறது.

வாய்க்கால் பணிகளை விரைந்து முடித்து வழியிடையில் உள்ள கூம்பூர் பெரியகுளம், ஆர்.வெள்ளோடு ஊராட்சி வடகம்பாடி குளம், குமரேசன் குளம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் ''என்றார்.

உதவி பொறியாளர் மகேஸ்வரனிடம் கேட்டபோது ,''26 கி.மீ., நீளமுள்ள இந்த வாய்க்காலின் கரையை உயர்த்தி மேல் வரிசையில் இரண்டு கற்கள் பதிப்பது பாலங்களைக் கட்டுவது தான் திட்டம். ஏற்கனவே பதிக்கப்பட்ட பழைய சிலாப் கற்களில் சிதிலமடைந்ததை மட்டும் மாற்றி உள்ளோம். ரூ. 130 கோடி கேட்ட நிலையில் ரூ.65 கோடி தான் ஒதுக்கி உள்ளனர். இதுவரை 100 கன அடி வரை தண்ணீர் சென்ற நிலையில் இனி 200 கன அடி வரை தண்ணீர் செல்லும். ஜனவரி கடைசிக்குள் தண்ணீர் திறக்க முயற்சி மேற்கொள்ளப்படும் ''என்றார்.






      Dinamalar
      Follow us