/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலை உறுதிப்பணிகளில் தொடரும் புகார் 'மாற்றப்படாத' பணித்தள பொறுப்பாளர்கள்

ADDED : மார் 19, 2025 05:28 AM
ரெட்டியார்சத்திரம் : அரசு வரழிகாட்டுதலை மீறி வேலை உறுதி திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்திற்குபின் பயனாளிகள் எண்ணிக்கை, அளவீடு, சம்பள நிர்ணய பணிகளுக்காக பயனாளிகளில் முறைகேடுகளை தவிர்க்க குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பணித்தள பொறுப்பாளர் மாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பணித்தள பொறுப்பாளர் மாற்றத்தை தவிர்த்து பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றுவதாக புகார் நீடிக்கிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி நந்தகுமார் கூறுகையில், பல ஊராட்சிகளில் பணித்தள பொறுப்பாளர் மாற்றப்படாமல் ஒருவரே தொடர்ந்து இதே பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இதனால் பயனாளிகள் எண்ணிக்கை, வேலை நாள் பதிவு, சம்பளம் வழங்கல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்கிறது. இதன் முறைகேடுகளுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், என்றார்.