ADDED : ஏப் 21, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொப்பம்பட்டி வட்டாரம் சார்பில் பாலப்பன்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியனுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.
முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். முன்னாள் வார்டு உறுப்பினர் முத்துசாமி, தொப்பம்பட்டி வட்டார கல்வி அலுவலர் யசோதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனிச்சாமி, ஆசிரியர் பயிற்றுநர் ரகுராமன், ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொறுப்பாளர் காளிமுத்து, தற்போதைய பொறுப்பாளர்கள் பிரபாகரன், வினோத் குமார், அன்புச் செழியன், கார்த்திகேயன் வாழ்த்தி பேசினர். இடைநிலை ஆசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

