ADDED : மே 07, 2024 04:53 PM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விடுப்பு வழங்காததால் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து அரசு பஸ் கண்டக்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல் முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திண்டுக்கல் நத்தம்ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை 2 பணிமனையில் கண்டக்டராக பணியில் உள்ளார். கடந்த சில தினங்களாக செல்வராஜ்.உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் நேற்று காலை தன் அலுவலகத்திற்கு வந்து தனக்கு விடுப்பு தருமாறு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வந்தார்.
அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளநிலையில் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ்,தன் டூவீலரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த சக ஊழியர்கள் செல்வராஜை,மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி குளிரவைத்தனர். தொடர்ந்து செல்வராஜ்,மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.