/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.பி.சி., ஒதுக்கீடு கோரி மாநாடு
/
எம்.பி.சி., ஒதுக்கீடு கோரி மாநாடு
ADDED : மே 25, 2025 04:51 AM

திண்டுக்கல் : கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி., இடஒதுக்கீடு பெற்றிட, தமிழக ஆயர் பேரவை பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., பணிக்குழு சார்பில் மாநில மாநாடு திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு மைதானத்தில் நடந்தது.
மறை மாவட்ட பணிக்குழு செயலாளர் அருள் ருபேஷ் வரவேற்றார். முதன்மை குரு சகாயராஜ், செயலக முதல்வர் தாமஸ் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சாம்சன் பேசினார்.ஆயர் தாமஸ் பால்சாமி பேசுகையில், ''இம்மாநாடு எந்தவொரு கட்சிக்கும், இனத்துக்கும் எதிராக இல்லை. எங்களுக்கான உரிமையைதான் கேட்கிறோம். ஹிந்து வன்னியர்கள் எங்களுக்கு எதிராக இல்லை. தேர்தலுக்கு முன்பு கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் யாருக்கு ஓட்டளிப்பது குறித்து செயற்குழு கூடி முடிவெடுக்கும். எஸ்.சி., எஸ்.டி., கிறிஸ்தவர் உரிமைக்காக போராடுவோம்'' என்றார்.