/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உறுதிப்படுத்துங்க: சுதந்திரத்தினத்தன்று மத்திய, மாநில அலுவலகங்களில் கொடியேற்றம்: விடுமுறை தினம் என அதிகாரிகள் சென்று விடுவதால்

ADDED : ஆக 09, 2025 04:22 AM

வத்தலக்குண்டு: சுதந்திர தினத்தன்று மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகளில் கொடியேற்றத்தை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் நாட்டுப்பற்றுடன் கொண்டாடப்பட்டாலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகளில் விடுமுறை தினமாக நினைத்து கொடி ஏற்றுவது இல்லை. மாநில அரசு அலுவலக அதிகாரிகள் மாவட்ட கலெக்டர், எஸ்.பி., பங்கேற்கும் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சென்று விடுவதால் கீழ்நிலை ஊழியர்கள் பல இடங்களில் பெயரளவிற்கு கொடியை ஏற்றிவிட்டு சென்று விடுகின்றனர்.
சில மாநில அரசு அலுவலகங்களில் தாலுகா அளவிலான கருவூலங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் வணிகவரி உள்ளிட்ட அலுவலகங்களில் கொடி ஏற்றப்படுவது இல்லை. பல பள்ளிகளில் பெயரளவுக்கு நான்கைந்து மாணவர்களை வரவழைத்து கொடியேற்றி கடமையாற்றுகின்றனர்.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கடன் சங்கங்கள், நகர வங்கிகளில் கொடியேற்றப்படுகிறது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கொடி ஏற்றப்படுவதில்லை. சாதாரணமாக வார நாட்களில் வரும் சுதந்திர தினத்தில் இந்த நிலை என்றால், வரக்கூடிய சுதந்திர தினமானது வெள்ளிக்கிழமை வருவதால் அதற்கடுத்த நாள் கோகுலாஷ்டமி விடுமுறை தினமாக இருப்பதாலும் சுதந்திர தினத்தன்று முழுமையாக கொடி ஏற்றப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகளில் கொடி ஏற்றப்படுவதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்.
* கண்காணிக்க வேண்டும்.
வரும் சுதந்திர தினமானது தொடர் விடுமுறைக்கு முதல் நாளாக இருப்பதால் கொடியேற்றம் நடப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் கிராமங்களில் கூட கொடியேற்றப்படுகிறது. ஆனால் நகர்புறத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கொடியே ஏற்றப்படுவதில்லை. இவர்களுக்கெல்லாம் நாட்டுப்பற்று என்று ஒன்று கிடையாதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
-- செந்தில், பா.ஜ.க., நிர்வாகி, வத்தலக்குண்டு: