/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதையில் மோதல்; பாட்டில் குத்து
/
போதையில் மோதல்; பாட்டில் குத்து
ADDED : அக் 05, 2024 04:23 AM
வேடசந்துார்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சூர்யா 30. திருமணமான ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வேடசந்துார் வந்தவர் அங்குள்ள ஒரு கோழிக் கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யாவுடன் வந்தபெண் அவருடன் கோபித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.
விரக்தி அடைந்த சூர்யா டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு போதையில் இருந்த தமுத்துப்பட்டி சக்திவேல் 30, கவுதம் 25, ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சக்திவேல் காலி பீர் பாட்டிலால் சூர்யாவை தாக்கியதில்
சூர்யாவுக்கு முகம், கழுத்து பகுதியில் ரத்தம் கொட்டியது. காயமடைந்த சூர்யா கத்தரிக்கோளால் சக்திவேல் கையில் குத்தினார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.