தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒன்றியங்களாக மாறிய காங்., வட்டாரங்கள்

 ஒன்றியங்களாக மாறிய காங்., வட்டாரங்கள்

 ஒன்றியங்களாக மாறிய காங்., வட்டாரங்கள்


ADDED : ஆக 31, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: தமிழக காங்கிரஸ் கட்சியில் இவ்வளவு ஆண்டுகளாக ஒன்றியங்களை 'வட்டாரம்' என குறிப்பிட்டு வந்த நிலையில், தற்போது திராவிட கட்சிகள் போல அந்த பதவிக்கு ஒன்றியம்' என்ற வார்த்தையை பயன்படுத்த தலைமையால் அறிவுறுத்தப்பட்டு, கட்சியினர் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

அரசு நிர்வாக கட்டமைப்பில் மாவட்டம், தாலுகா, ஒன்றியம் என, பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கட்சிகள் தங்களது வசதிக்காக அதையே 2, 3 ஆக பிரித்து நிர்வாகிகளை நியமித்து, செயல்படுகின்றன. இவ்வகையில் திராவிட கட்சிகள் ஒன்றியங்களுக்கு முதன்மை பதவியாக ஒன்றியச் செயலாளர் என வரையறுத்துள்ளது.

இதையே தேசிய கட்சிகளான பா.ஜ.,வில், 'மண்டல் தலைவர்' எனவும், காங்கிரஸ் கட்சியில், 'வட்டாரத் தலைவர்' எனவும், பயன்பாட்டில் இருந்தது. இன்றளவிலும் பா.ஜ., கடிதப் போக்குவரத்தில், 'மண்டல் தலைவர்' என இருந்தாலும், மக்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக பொது வெளியில் பா.ஜ., ஒன்றியத் தலைவர் என்றே குறிப்பிடுகின்றனர்.

இந் நிலையில் ஆக.,20ல் சென்னையில் நடந்த காங்., பொதுக்குழு கூட்டத்தில், 'வட்டாரத் தலைவர்' என்பதை, இனி 'ஒன்றியத் தலைவர்' என குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது காங்கிரஸ் கட்சியில் துவங்கியுள்ள உட்கட்சி தேர்தல் நடைமுறையிலும், 'ஒன்றியத் தலைவர்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us